Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இலங்கை நாட்டில் என்றுமில்லாதவாறு திட்டமிட்டு இனக்குரோதங்களும் சமய முரண்பாடுகளும் உருவாக்கப்பட்டு.....


இலங்கை நாட்டில் என்றுமில்லாதவாறு திட்டமிட்டு இனக்குரோதங்களும் சமய முரண்பாடுகளும் உருவாக்கப்பட்டு ஆட்சி மாற்றங்களுக்கும் வேறு தேவைகளுக்குமாய் பாவிக்கப்பட்டதனால்  இந்த அழகிய ஸ்ரீலங்கா இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

சமாதான தூதுவர் விருது வழங்கும் நிகழ்வில் முனனாள் அமைச்சர் அதாவுல்லா

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

உலகம் முழுவதும் சமாதானம் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது. எல்லா மதங்களும் அதனையே போதிக்கின்றன. பலமிக்க அமெரிக்கா பிரித்தானியா ரஷ்யாபிரான்ஸ் போன்ற நாடுகளும் சமாதானத்தை வலியூறுத்துவதாகவே ஊடகங்களில்  சொல்லப்படுகிறது. இருப்பினும் மனிதகுலம் உலகம் முழுவதுவூம் மனிதத்துவத்தை இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு சமாதான கற்கை நெறிகளுக்கான நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவும்  சமாதன தூதுவர் விருது வழங்கும் வைபவமும் கடந்த புதன்கிழமை ( 4 )  கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நிறுவன தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  எ.எல்.எம்.அதாஉல்லா  தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மேற்சொன்ன வல்லரசுகள் - மூன்றாம் உலக நாடுகள்  இயற்கை வளங்கள் உள்ள நாடுகளுக்குள்  தந்திரமாகப் பிரவேசித்து அங்கிருக்கும் வளங்களை கபளீகரம் செய்வதற்கும் தங்களுடைய அதிகாரப் பலத்தை ஆங்காங்கே நிலை நிறுத்துவதற்கும் மும்முரமாகப் போட்டியிடுகின்றன. விஷேடமாக ஆயூத வியாபாரங்களும் இதற்குள் மறைந்து கிடப்பது புதினமானதொன்றல்ல. தங்களின் உள்நோக்கங்களை வெற்றியடையச் செய்வதற்காக சமாதானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பதை விடவூம்  மனித குலத்தையே வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன மார்க்கமோ புரியவில்லை. குறிப்பாக இனங்களுக்கிடையில் கலவரத்தை உருவாக்குதல்  பிரிவினை வாதங்களுக்குத் தீணி போடுதல்  இளைஞர் சமுதாயத்தின் இளமைத்துடிப்பை உச்சமாகப் பாவித்து அவர்கள் வெற்றி காண்பதற்காய் ஆயூதக் குழுக்களும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இவ்வாறான சிறிய நாடுகளுக்குள் இவர்களுடைய அட்டகாசமானது மனிதாபிமானத்திற்கப்பாலும் சென்று கொண்டிருப்பது  இறை நியதியொன்று உள்ளதனை புரிந்து கொள்ளாமலா என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. பாவம் இந்நாடுகள். இன்றுவரை உலகமக்கள் ஏன் தெளிவுபடுத்தப்படவில்லை? இதனை மனிதாபிமானம் உள்ளவர்களின் கவனித்திற்காய் ஞாபகப்படுத்துகிறேன்.
மகாத்மா காந்தியின் - இந்தியாவில் கூட சுதந்திரம் கிடைத்ததிலிருந்து பின்பற்றப்பட்டுவந்த வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு மாற்றமாக இன்றைய அரசும் தலைமையும் எதிர்த் திசையில் கைகோர்த்து உள்ளதால் இந்தியாவும் பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரலாம். இன்றுஅங்கு  பாரதூரமான இனவிரிசல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் அரசியலும் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. சிறிய நாடான இலங்கையிலும் அவ்வாறுதான் கடந்த காலங்களில் ஆயூதக் குழுக்கள் பயிற்றுவிக்கப்பட்டு வெவ்வேறு வெளிநாட்டு சக்திகளுக்குத் துணைபோய் இந்த ஸ்ரீலங்கா வரலாற்றுத் துயரத்தை அனுபவித்து வந்தது. இந்தியாவில் ராஜிவ் காந்தியைப் போன்று இலங்கையிலும் சிங்கள  முஸ்லிம்  தமிழ் அரசியற் தலைவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அங்கெல்லாம் பொம்மைத் தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட்டது. பௌத்த  இந்து  இஸ்லாம்  கிறிஸ்தவ ஆலயங்கள் தகர்த்தெறியப்பட்டன. பல்லாயிரக்கணக்கான இந்நாட்டு மக்கள் பரிதாபமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்நாட்டின் பணம் சொத்துக்கள் எல்லாமே நிர்மூலமாக்கப்பட்டது. அது ஒரு சோக வரலாறு. அவ்வாறான வரலாறு தோற்கடிக்கப்பட்டதன் பின்பும் இலங்கையைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான போட்டியிலிருந்து வல்லரசுகள் தவிர்ந்து கொண்டபாடில்லை. இதனால் இன்று இலங்கை நாட்டில் என்றுமில்லாதவாறு திட்டமிட்டு இனக்குரோதங்களும் சமய முரண்பாடுகளும் உருவாக்கப்பட்டு ஆட்சி மாற்றங்களுக்கும் வேறு தேவைகளுக்குமாய் பாவிக்கப்பட்டதனால் இந்த அழகிய ஸ்ரீலங்கா இன்று தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. மேலும்  ரோஹிங்யாவின் கோரக் காட்சி உலகையே உலுக்கியூமிருக்கிறது. இவைகளை அவதானிக்கின் போதுதிருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுஎன்பது இன்று பேசப்பட வேண்டியிருக்கிறது. சமாதானத்தை சீர் குலைக்கும் நடவடிக்கைகளைத் தந்திரமாக எடுத்துக் கொண்டு வரும் இந்த வல்லரசுகளின் மனநிலைகளில் மாற்றங்கள் வர வேண்டும். இதனை ஆங்காங்கு வாழுகின்ற மக்களினுடைய அறிவிற்கு மாத்திரமன்றி மனங்கள் கசிந்து கண்ணீர் விட வேண்டிய இச் செய்திகள் கொண்டு செல்லப்பட வேண்டும். மீண்டும் மனிதகுலத்தின் மனிதாபிமானம் உள்ளவர்களையூம் வாழப்போகின்ற இளைஞர்களையூம் ஞாபகப்படுத்துகின்றேன்.
குறிப்பாக பாரததேசம்  இப்பிராந்தியத்தில் அதே மண்ணைப் போன்று - அயல்நாடாகவூம் இருக்கின்ற பாகிஸ்தான்  பங்களாதேஷ்  இலங்கை போன்ற நாடுகளுக்கு மகாத்மா போல் தலைமை கொடுக்க முடியாது போய்விட்டாலும் அம்மண்ணின் மகத்துவத்தைக் காப்பாற்றுவதற்கென்றாவது முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். தமது உள்நாட்டில் உள்ள பிரச்சினைகள் மாத்திரமன்றி அயல்நாடுகளோடு உள்ள பிரச்சினைகளையூம்  இன முரண்பாடுகளையூம்  களைந்தெறிவதற்கும் இப்பிராந்தியம் முழுவதும் அமைதி நிலவூவதற்கும் முன்னுதாரணமாக மாற வேண்டும். சிலவேளைகளில் தெற்காசியப் பிராந்தியம் குரங்கு அப்பம் புறித்த கதை போல் ஆகிவிடக்கூடாது. இவ்வரலாற்றுச் செய்தியினை சிரமேற்கொண்டு உண்மையான சமாதானத்திற்காக இந்தியா முன்வரவேண்டும். இப்பிராந்தியத்து நாடுகளும் இச்செய்தியினை உணர்ந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

என்று தெரிவித்தார்
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget