Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்வுதான் என்ன? Video


தற்பொளுது இலங்கையை அச்சுறுத்தும் அரக்கன் டெங்கு 


இந்நோயின் தாக்கமானது கல்முனை மாநகரசபை எல்லைக்குள்ளும் கோராத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தரப்பினரும்பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் அதன் அபாயம் குறைந்தபாடில்லை.


டெங்கு கட்டுப்பாட்டுக்கு கல்முனைப் பிராந்திய சுகாதாரத் துறையினர் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படுவது திண்மக் கழிவகற்றல் முறைமையில் காணப்படும் குறைபாடு ஆகும் குறிப்பாக சாய்ந்தமருது பகுதியில் கல்முனை மாநகராசபையால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் முறைமை திருப்திப்படும் அளவில் இல்லை.சாய்ந்தமருதில் குறிப்பிட்ட சில பொது இடங்களில் தினமும் பொதுமக்களால் வீசப்படும் கழிவுகள் அவ் வீதிகளை அசிங்கப்படுத்துவது மாத்திரமல்லாது ,சுற்றுப்புறச் சூழலையும் மாசடையச் செய்கின்றனகாக்கைகளும், கட்டாக்காலிகளும்இக் கழிவுகளை நடு வீதிகளில் கலைத்து விடுவதால் அவ்வீதிகளில் பயனிக்கும் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்ஆனபடியால் இவ்வாறான இடங்களில் கழிவுகளை கொட்டவேண்டாமென சுகாதாரத்  துறையினராலும் மாநாகர சபையாலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.கல்முனை மாநகரசபையின் முறைமையற்ற கழிவகற்றல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள 

இப்பகுதி மக்களுக்கு இதற்கான மாற்றுத் தீர்வுதான் என்னவீடுகளில் சேரும் தின்மக் கழிவுகளை முறைமைப்படுத்தப்பட்ட வகையில் சீராக அகற்றுவதற்கு 

போதிய வழங்கள் மாநகரசபையில் இல்லை என்ற குற்றச்சாட்டு கல்முனை மாநகரசபையால் முன்வைக்கப்படுகிறது.இந்நிலையில் இவ்வாறான கழிவுகளை நீண்ட நாட்களுக்கு வீடுகளிலும் வைத்துக்கொள்ள முடியாது 

அன்றாடம் சேரும் கழிவுகளை அவ்வப்போது கொண்டு சென்று போடுவதற்க்கான இடம்கூட அடையாளப் படுத்தப்படவில்லைஆனபடியால் அகப்பட்ட இடங்களிலெல்லாம் கழிவுப்பொருட்களைஇரவு வேளைகளில் பொதுமக்கள் 

வீசிச் செல்கின்றனர்இவ்விடயம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் நாள் கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கலசம்.கொம் நேரடியாக சுட்டிக்காட்டியிருந்தது.ஆனபோதிலும் இதுவரை இப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கவில்லை. சாய்ந்தமருதின் தின்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வு கிட்டும்வரைகலசம்.கொம்

இரண்டு தாற்காலிகத் தீர்வுகளை முன்மொழிகின்றது.அதில் முதலாவதுசாய்ந்தமருதில் தினமும் கழிவுகள் சேரும் இடங்களாக இனங்காணப்பட்ட 

பிரதான வீதி பொது நூலகம் அருகிலும் 

வைத்தியசாலை வீதி பாலம் அருகிலும் 

ஒஸ்மன் வீதியானது கடற்கரை வீதியை தொடும் சந்நிதியிலும் 3 ட்ரெக்டர் பெட்டிகளை நிறுத்திவைத்து. மக்களை அப்பெட்டிகளுக்குள் கழிவுப் பொருட்களை போடுவதற்கு வளிவகை செய்தல்மறு நாள்,கழிவுப் பொருட்களை சேகரிக்க வரும் ட்ரெக்டர் வெற்றுப் பெட்டியுடன் வந்து

அப்பெட்டியை அவ்விடத்தில் கழற்றி வைத்துவிட்டு அவ்விடத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் சேந்த பெட்டியை எடுத்துச் செல்லலாம்.இதன்மூலமாக தினமும் அகற்றப்படும் கழிவுகளின் பெறுமானத்தை மேலும் பலமடங்குகள் 

அதிகரிக்க முடியும்.இது,சாத்தியம் இல்லை என்றால் இரண்டாவது தீர்வாகமேற்கூறப்பட்ட 

இனம் காணப்பட்ட இடங்களுள், மக்கள் செறிவு மிகக்குறைந்ததும், ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக 

காணப்படுவதுமான

ஒஸ்மன் வீதியானது கடற்கரை வீதியை தொடும் சந்நிதியில் உள்ள கடற்கரை பக்கமாக ஒரு வேலி அமைத்து, அதற்க்கு உட்புறமாக கழிவுப் பொருட்களைப் போட வலியுறுத்தும் பதாகை ஒன்றை நிறுவுவதன் மூலமாக பொது மக்களை தெளிவுபடுத்தி தைரியமாக 
 எவரும், எவ்வேளையிலும் அதனுள் கழிவுகளை போடக்கூடிய நிலையை உருவாக்கி,அவ்விடத்தில் போடப்படும் கழிவுகளை மாநகரசபையானது தினமும் அகற்றத்தக்க வகையில் 

நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதன் மூலமாக இப்பிரச்சினைக்கு ஒரு மாற்றுத் தீர்வை காணமுடியும்சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற சாத்தியமான வழிகள் தொடர்பில் ஆராய்ந்து சாய்ந்தமருதின் தின்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்களா ?

http://www.tv.kalasem.com/2017/01/blog-post_9.html
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget