Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என பகற்கனவு காணும் தோல்வியின் உச்சக்கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இப்போதே தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

 இவ்வாறு சாய்ந்தமருது 22 ஆம் வட்டாரத்தில் சுயேட்சைக்கு வேட்பாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாளிகைக்காடு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

சாய்ந்தமருது மக்களின் தனியான பிரதேச சபை போராட்டத்தை வெற்றி கொள்வதற்காக  பொதுமக்களிடமிருந்து பொதுசன அபிப்பிரயாயத்தையும் அங்கீகாரத்தையும் ஒட்டுமொத்தமாகப் பெறுவதற்கான சர்வஜென வாக்கெடுப்பாக நடைபெறப் போகும் உள்ளராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்தக்கூடிய மிகப்பெரியதொரு சந்தர்ப்பத்தை இறைவன் எமக்கு தந்துள்ளான்.

இத்தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் மக்கள் பணிமனை சார்பாக சுயேட்சை குழுவில் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் தேசியமும் சர்வதேசமும் அரசியல் தலைமைகளும் ஆய்வாளர்களும் அதிர்ச்சியடையக்கூடிய வெற்றியினைப் பெறவுள்ளதனை இன்று இங்கு கூடியுள்ள மக்கள் வெள்ளம் சான்று பகிர்வதுடன் இந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்று கல்முனை மாநகரசபையின் மேயராகவோ ஏனைய பதவிகளிலோ அமர்வதற்கு ஆசைப்படாதவர்களாக உள்ளனர். இவர்களினதும் சாய்ந்தமருது மக்களினதும்  ஒரே குறிக்கோள் இவ்வளவு காலமும் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை தருவதாக வாக்குறுதி அளித்து மக்களையும் மாளிகைக்காடு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையையும் ஏமாற்றி அகனூடாக கடந்த கால தேர்தல்களில் சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தமது இலக்கை அடைந்தவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதேயாகும்.

எந்தவொரு அரசியல்வாதியிடமும் கையேந்தாமல் சாய்ந்தமருது மக்களின் வாக்குப் பலத்தோடு தமது புனித இலட்சியமான தனியான பிரதேச சபையை பெறுவதற்கான ஆணையைப் பெறுவதேயாகும்.

சாய்ந்தமருது மக்களின் இலட்சியத்தை வெற்றிகொள்வதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது பிரதேசத்தில் வேட்பாளர்களை நிறுத்தாத போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது சாய்ந்தமருது மக்கள் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல வருடங்களாக சாய்ந்தமருது மக்களிடம் தனியான பிரதேச சபை தருவதாக பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி வழங்கி விட்டு இப்போது  அதனை வழங்க முடியாது என்று கூறுவது மட்டுமல்ல அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதற்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகின்றனர். இதற்கு மேலதிகமாக கடந்த பொதுத் தேர்தலின் போது பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களை கல்முனைக்கு அழைத்து வந்து அவர் மூலமாக சாய்ந்தமருதிற்கான தனியான பிரசே சபையை பொதுத் தேர்தல் முடிந்தவுடன் தருவதாக வாக்குறுதி வழங்க வைத்து விட்டு அத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் மிகவும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று ஆட்சிப்பீடமேறி மந்திரிப்பதவிகளையும் பெற்ற பின்னர் வாக்குமாறி முன்னுக்குபின்னான கருத்துக்களைக்கூறி பித்தலாட்டம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமது மண்ணை தாமே ஆள வேண்டும் என்று சாய்ந்தமருது மக்கள் ஆசைப்படுவது நியாயமான கோரிக்கைதான் என்று அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் கருத்து தெரிவிக்கையில் சுயநலவாத அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு முட்டுக்கடையாக இருப்பது நியாயமானதா .

அரசியல்வாதிகளினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட சாய்ந்தமருது மக்கள் செய்வதறியாது இறுதியில் மாளிகைக்காடு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் உதவியை நாடினார்கள். அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களை பலதடவைகள் சந்தித்தோம். உங்கள் கோரிக்கை நியாயமானது கட்டாயம் சாய்ந்தமருதிற்கான தனியான பிரதேச சபை நிச்சயமாக கிடைக்கும் என எங்களிடம் உறுதியளித்தார். இச்சந்திப்பின் போது இப்போது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்கள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் சுகபோக வாழ்க்கைக்காவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மானத்தை காப்பாற்றுதற்காக களமிறக்கப்பட்டுள்ளார்களாம். இவர்கள் நடைபெறப் போகும் தேர்தலில் மிகப்படுமோசமான தோல்வியினை தழுவப் போவதனை எவராலும் தடுக்க முடியாது. சாய்ந்தமருது மக்களின் புனித போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சாய்ந்தமருது மக்களால் துரோகிகள் என்ற பட்டத் சூட்டுவதற்கும் முன் இத் தேர்தலில் இருந்து ஒதுங்கி கொள்வார்களேயாயின் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் இவர்கள் போற்றப்படுவார்கள்.


என்று  தெரிவித்தார்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget