Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பரிட்சை உங்களது கல்வி வாழ்கையின் ஆரம்பம் மட்டுமே.இது கல்வியின் முடிவல்ல - காதர் மஸ்தான் எம்.பி

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு இணைத் தலைவர் K .காதர் மஸ்தான் அவர்களின் வாழ்த்துச் செய்தி

இவ்வாண்டு நடை பெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிக்கு மேலெடுத்த மாணவச் செல்வங்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வெட்டுப் புள்ளிக்கு மேல் எடுக்காத மாணவச் செல்வங்கள் பாதிக்கப்படவோ கவலை அடையவோ கூடாது.இந்த முயற்சியில் இரவு பகலாக நீங்களும் உங்கள் ஆசிரியர்களும். உங்களது பெற்றோர்களும். எடுத்த அயராத முயற்சிகள் வீன்போகாது ஏனெனில் இந்தப் பரிட்சை உங்களது கல்வி வாழ்கையின் ஆரம்பம் மட்டுமே.இது கல்வியின் முடிவல்ல இது உங்களின் முதற்படிதான்.


இன்னும் கல்வியில் நீங்கள் தாண்டிச்செல்ல வேண்டிய ஏணிப்படிகள் நிறையவே இருக்கின்றன. எனவே உங்களது கல்விக்கான முயற்சியும் அறிவுத்தேடலும் புத்தூக்கத்துடனும் உற்சாகத்துடனும் மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget