Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்திய பின்னரே மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களையும் நடாத்த வேண்டும் – அமைச்சர் சம்பிக்க

( நமது நிருபர்)
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்தி அதன் சாதக பாதகத் தன்மைகளை அறிந்த பின்னர் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களையும் நடாத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனக்கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுவரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
”உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் அவதானிப்பு ” எனும்  தொனிப்பொருளில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின்  தலைமையகத்தில் நேற்று ( 3 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு ரெிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்  
வடமாகாண சபைக்கு அதிகாரம் இருந்தும்  பணியாற்றுவதில்லை. ஏனைய மாகாணசபைகள் செய்யும் பணிகளையாவது வட மாகாணசபை செய்ததில்லை. மாகாணசபைக்கு அதிகாரம் வேண்டும் என்று கூக்குரலும் கூச்சலுமிடுபவர்கள் இடுபவர்கள் இன்று அவர்களது மாகாணசபைகளுக்கு அதிகாரம் இருந்தும் பணியாற்றுவதில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையிலேயே  புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதுவல்லாமல்  1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பைப் போன்ற அல்லது 1988 இல் மாகாணசபை முறை  அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget