Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சர்வதேசத்தில் சாதனை ஏற்படுத்திய கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்களுக்கு பெரும் வரவேற்பு

( கல்முனை பிரதேச நிருபர்கள்)
இந்தோனேசியா ஜகார்த்தா நகரிலுள்ள மேர்கு வுயானா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற 4வது சர்வதேச இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டு சூரிய சக்தி மூலம் இயங்கும் விசிறும் இயந்திரத்தை காட்சிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பீட மாணவன் .எம்.எம்.சவ்பாத் மற்றும் தென் கொரியாவில் இடம்பெற்ற புத்தாக்குனர் போட்டியில் நெல் நாற்று நடும் இயந்திரத்தை கண்டு பிடித்து காட்சிப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற .ஜே.அஜாத் ஆகியோரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற நிகழ்வொன்று இன்று கல்லூரியில் இடம்பெற்றது.
பாடசாலை முகாமைத்துவ குழு, பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் என்பன கூட்டாக ஒழுங்கு செய்திருந்த மேற்படி ஊர்வலம் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி ஸாஹிராக் கல்லூரி வீதி, பிரதான வீதி வழியாக கல்முனை வலய கல்வி காரியாலயத்தை சென்றடைந்தது.
வலய கல்வி அலுவலகத்தில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர், பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் வலய கல்வி அலுவலக உத்தயோஸ்தர்கள் மாணவர்களை வரவேற்றனர்.
கல்முனையிலிருந்து கடற்கரைப்பள்ளி வீதி கடற்கரை வீதி மாளிகா வீதியாக மீண்டும் சாய்ந்தமருதுகல்முனை பிரதான வீதியினூடாக ஊர்வலம் கல்லூரி வளாகத்தை அடைந்தது.
செல்லும் வழியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை, கல்முனைக்குடி முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாசல், கல்முனை பிரதேச வர்த்தகர்கள், பழைய மாணவர்கள், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயம், கல்முனை பிரதுச செயலகம்  கல்முனை  சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக்கழகங்கள் கல்முனை வலய கல்வி அலுவலகம், கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயம், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது பிரதேச வர்தகர்கள், sri lanka state trading Corporation, சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல், சாய்ந்தமருது அல் கமறுன் விததியாலயம், என்பவற்றுக்கு முன்பாக மாணவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தில் அதிபர் எம்.எஸ்.முஹம்மட் பிரதி அதிபர் எம்.எச்.எம்.அபுபக்கர் புத்தாக்குனர் கழக பொறுப்பாசிரியரும் உயர்தர தொழில்நுட்ப பீட பகுதித் தலைவருமான . ஆதம்பாவா கல்லூரி ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் மாணவர்கள் என பலரும் கலநது கொண்டனர்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget