Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் தான் கல்முனை பிரதேச மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததுடன் பல அபிவிருத்தியையும் கண்டார்கள்.

.
( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் தான் கல்முனை பிரதேச மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததுடன் பல அபிவிருத்தியையும் கண்டார்கள்.
இவ்வாறு கல்முனையில் கடந்த திங்கட் கிழமை ( 2 ) நடைபெற்ற இளைஞர்களுடான தற்கால அரசியல் சம்பந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி  அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தற்போது நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கல்முனைத் தொகுதி வரண்ட பாலைவனம் போல் எந்தவித அபிவிருத்தியும் இன்றி இருப்பது நமது பிரதேச அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியலை தெளிவுபடுத்துகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி நமது நாட்டை ஆட்சி செய்த போது கல்முனைத் தொகுதியில்  பல அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றதுடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளும் அவ்வப் போது வழங்கப்பட்டு வந்தன.
இன்று இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் விரக்தியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்று தமது வாழ்நாளில் அதிகமான காலத்தினை அங்கேயே கழித்தும் வருகின்றனர்.  தற்போதய அரசியல் களநிலவரத்தைப் பார்க்கும் போது கல்முனை பிரதேச மக்கள் எதிர்காலத்தில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முனைவது போன்றதொரு சமிக்ஞை ஏற்பட்டுள்ளது. மத ரீதியாக  இன ரீதியாக கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதால்  அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளும் நிதி ஒதுக்கீடும்  முஸ்லிம் பிரதேசங்களுக்கு குறைவாகவே கிடைத்து வந்துள்ளன. தற்போதும் இந்த நிலைதான். காலத்திற்கு காலம் வரும் தேர்தல்களின் போது பொதுமக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இநத மாதிரியான ஏமாற்று வித்தைகளுக்கு எதிர்கால சந்ததியினர் இனிமேல் துணை போக மாட்டார்கள்.

பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் தேசிய கட்சியொன்றில் அங்கம் வகிப்பதன் மூலமாகவே பெற்றுக் கொள்ளமுடியும். எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் ஆதரித்து வெற்றியடையச் செய்வதன் மூலம் முன்பிருந்த ஆட்சியாளர்களைப் போல் எமது பிரதேசம் அபிவிருத்தி காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும். என தெரிவித்தார்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget