Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அணி தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரகாசிப்பு


( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் அம்பாறை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்களைக் கொண்ட இளைஞர் அணி 20 வயதுக்கு  மேற்பட்ட  4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்ககங்களை வென்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்ட .ஜி.எம்.மஸ்புத்  ஆர். எம்.றஸ்பாஸ்  ஜே.எம்.இன்ஸாப் எம்.யு..சம்லி ஆகியோர் இந்த அஞ்சலோட்டத்தில் பங்கு பற்றியதுடன்  200 மீற்றர் ஓட்டப் போட்டியில் .ஜி.எம்.மஸ்புத்  2 ஆம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும்  4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இதே அஞ்சலோட்ட குழுவினர் 3 ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

கடந்த வருடம் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் இம்மாணவர்கள் பல தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தனர்

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget