Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றிகொண்ட இலங்கை அணிக்கு அமைச்சர்கள் பாராட்டு

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பாகிஸ்தானுக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இலங்கை அணியை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
விளையாட்டுத்துறையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் நிலையில்  அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணியை இதய புர்வமாக வாழ்த்துவதாக விளையாட்டுதுறை அமைச்சரும்  பிரதி அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவி வந்ததால் இருள்மயமாகிப் போயிருந்த இலங்கை கிறிக்கெட்டில் இந்த வெறறியுடன் புத்தொளி பிறந்துள்ளதென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலகுவான வெற்றி இலக்கை கடுமையாக்குவதில் அர்ப்பணிப்புடனும் மனோதைரியத்துடனும் இலங்கை வீரர்ரகள் செயற்பட்டமையே வெற்றிக்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget