Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

8 வருடங்களின் பின்னர் கல்முனையில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை டொப் ரேங் விளையாட்டுக்கழகத்தின் 33 வருட புர்த்தியினை முன்னிட்டும் 5 வது கிறிக்கட் சீருடை அறிமுகத்தினையும் முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அண்மையில்    நடைபெற்ற கண்காட்சி கிறிக்கட் போட்டியில் 3 விக்கட்டுக்களினால் கல்முனை டொப் ரேங் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
16 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 16 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றனர். கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றியாஸ் 29 ஓட்டங்களையும் சப்ராஸ் 27 ஓட்டங்களையும் பெற்றதுடன் றியாஸ் 3 விக்கட்டுக்களையும் சஜான் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப் ரேங் விளையாட்டுக்கழகத்தினர் 15.4  ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர். கல்முனை டொப் ரேங் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றிகாஸ் 50 ஓட்டங்களையும் சியாம் 20 ஓட்டங்களையும் பெற்றதுடன் மன்ஸாப் 3 விக்கட்டுக்களையும் பைஸால் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
இப்போட்டியில் சிறப்பாட்டக் காரராக கல்முனை டொப்ரேங் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.எச்.எம்.றிகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வின் போது கல்முனை டொப் ரேங் விளையாட்டுக்கழகத்தில் கடந்த 27 வருடங்களாக விளையாடி ஓய்வுபெற்றுக் கொண்ட எம்..எம்.நைஸர் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கல்முனை டொப் ரேங் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் யு.எல்.எம்.பஸீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி போட்டிக்கு முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.மயோன் முஸ்தபா பிரதம அதிதியாகவும் கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் மற்றும் கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழக தலைவர் கே.எல்.சுபைர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்  கல்முனை மெகா மார்ட் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.பீ.எம்.தன்ஸீர்  தாமியா பாரித் உரிமையாளர் எம்.எம்.நௌஸர் பயாஸ் மோட்டோர்ஸ் உரிமையாளர் .எல்.எம்.பயாஸ்  பர்ஸாத் மோட்டோர்ஸ் உரிமையாளர் .எம்.பர்ஸாத்  சர்வான் மோட்டோர்ஸ் உரிமையாளர் .எம்.எம்.சர்வான் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களார் அம்பாறை மாவட்ட கரையோர கிறிக்கட் மத்தியஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த .டபிள்யு.எம்.ஜெஸ்மின் மற்றும் எஸ்.எம்.நஸாத் ஆகியோர் கடமையாற்றினார்கள்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget