Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சினேகபுர்வ கடினபந்து கிறிக்கட் போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுக்களினால் வெற்றி

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுக்களினால் வெற்றி

 சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்திற்கும்  இடையிலான 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபுர்வ கடினபந்து கிறிக்கட் போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( 6 ) இடம்பெற்ற மேற்படி கிறிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் 18 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தினர் 15.2 ஓவர்களில்   151  ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
கல்முனை றினோன் விளையாட்டுக்கழகத்தின் சார்பில்  அரபாத் 54 ஓட்டங்களையும் பிர்தௌஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர் .

சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் ஆதில் 51 ஓட்டங்களையும்   இம்திகாப்  21 ஓட்டங்களையும்   வஸீம் 24 ஓட்டங்களையும் பெற்றதுடன்   வஸீம்   4  ஓவர்கள் பந்து வீசி  17  ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் இல்யாஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.  

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget