Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

2018 ஆம் ஆண்டு முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக புதிய ஆங்கில புத்தகங்கள்

2018 ஆம் ஆண்டு முதல்  முதலாம் மற்றும் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக புதிய ஆங்கில புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது இலங்கையில் மூன்றாம் தரத்திலிருந்தே பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான பாடப்புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது ஆரம்ப வகுப்புகளிலிருந்தே ஆங்கிலப் பாடத்தினை மாணவர்களுக்கு  வழங்கும் நோக்கில் இந்த  நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாட புத்தகங்களை தயார் படுத்தும் நடவடிக்கைகளை மகரகம தேசிய கல்வி நிறுவகம்  மேற்கொண்டு வருகின்றது.

இப்பாடப்புத்தகங்களுடன் பாட உள்ளடக்கம் சம்பந்தமான இறுவட்டுகளும் பாடப்புத்தகங்களுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவக உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget