Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மருதமுனை கல்வி அபிவிருத்திக்கு SESEF நிதி உதவி !

ஷம்ஸ் மத்திய கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் விஞ்ஞான பாட விசேட செயத் திட்டத்திட்கும் மற்றும் அல்-மதீனா வித்தியாலய புலமைப்பரிசில் பரீடசை பிரிவு மாணவர்களின் விசேட கல்வி செயட்பாடுகளுக்குமாக  மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தினால் (SESEF) நிதி உதவிகள் வழங்கிவைக்கபட்டது.

கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின்(SESEF), விசேட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திட்கு அதிதியாக கலந்து கொண்ட  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஏ.றசாக் (ஜவாத்) அவர்கள் காசோலைகளை  சம்பிரதாய பூர்வமாக பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எப்.ஹிபதுல் கரீம், பிரதம ஆலோசகர் எ.எச்.எம்.அன்சார், செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத், நிதிப் பணிப்பாளர் எம்.எப்.எம். மர்சூக், ஆகியோரும் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் அமைப்பின் கல்வி செயட்பாடுகளுக்காக அனுசரணையாளர்களாகவிருந்த அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவரான தொழில் அதிபர் ஏ. எம்.கமால்தீன் B .Com, கலாநிதி எ.எ.நுபைல், எஸ்.எல்.பி உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஷம்ஸ் மத்யகல்லூரிக்கு ரூபாய் 25,௦௦௦/- உம் , மதீனாவுக்கு 30 ,௦௦௦/- உம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்




Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget