Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதின் அவசர தேவைகள் குறித்து சாய்ந்தமருது நலன்புரி மன்றம் பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவுக்கு கடிதம் !

சாய்ந்தமருதின் அவசர தேவைகள் குறித்து சாய்ந்தமருது நலன்புரி  மன்றம்  பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவுக்கு கடிதம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக்கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், சாய்ந்தமருதில் அவசர தேவைகளாக இனம் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் சாய்ந்தமருது நலன்பிரி மன்றம், சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுவின் செயலருமான ஐ.எம். ஹனீபா அவர்களிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்றத்தின் செயலாளர் பொறியியலாளர். எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் ஒப்பமிட்டு வழங்கியுள்ள இக்கடிதத்தில், இனம் காணப்பட்ட பிரச்சினைகளாக,

1). குருநெல் கஞ்சி  ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள பாதையானது தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே கொண்க்ரீட் இடப்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இப்பாதையினை  முழுமையாக செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

2).  சாய்ந்தமருதில் அமைந்துள்ள சகல வீதிகளிலும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வீடுகளுக்கு நீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட இடங்கள் குன்றும் குழியுமாக பல்லாண்டு காலமாக செப்பனிப்படாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுவதுடன், வாகன விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதற்குப் பொறுப்பானவர்கள் இதனை செப்பனிட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். ( இக்குழிகள் தோண்டுவதற்கு முன்னரே இதனை செப்பனிடுவதற்கான பணம் உரியவர்களிடம் மாநகர சபை அறவிடுவது குறிப்பிடத்தக்கது)

3). பல கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது "வீச் பார்க்" மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டும், அது மக்கள் பாவனைக்கு திருப்திகரமாக அமைக்கப்படாத நிலையில், மீண்டும் அதெற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். ஆனபடியால் இதனை மீள் உணரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு உகந்ததாக மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

4). "டெங்கு" நோய் ஏற்படுவதற்கு சாதகமாய் அமைந்துள்ள சகல வடிகான்களும் சம்பந்தப்பட்டவர்களினால் துப்பரவு செய்யப்படல் வேண்டும்.

5). பாடசாலை ஆரம்பிக்கின்ற, முடிவடைகின்ற நேரங்களில் சில பாதைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றபடியினால் அவ்வீதிகளை  குறிப்பிட்ட நேரங்களில் ஒற்றை வழிப்பாதையாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

என குறிப்பிடப்பட்டுள்ளது.





 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget