Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு ஜனாஸா வாகனம் வழங்கிவைப்பு !

-யூ.கே.காலிதீன்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக சாய்ந்தமருது பிரதேச மக்களின் மிக நீண்டகால தேவையாகவிருந்த ஜனாஸா ஏற்றிச் செல்லும் வாகனத்தை சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் நிருவாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

ஜனாஸா வாகனத்தை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர் அல் - ஹாஜ் வை.எம்.ஹனீபா அவர்களிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் கட்சியின் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராஷாஹிப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/http://www.paylot.lk/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget