Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு நாளை கல்முனையில் விசேட துஆ பிரார்த்தனை - ஜவாத் !

கல்முனை மாநகரின் அபிவிருத்தியின் சின்னமும், அரச அலுவலகங்களை காலடியில் அமர்த்திய சானக்கியவானும்,சாதி மத வேதமின்றி அர்பனிப்புடன் சேவையாற்றிய உத்தமரும், மக்களுக்காய் 24மணிநேரமும் உழைத்த எமது மாமகன் முன்னாள் வர்த்தக வானிப கப்பல்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் (எம்.பி) அவர்கள் கடுமையான சுகயீனம் உற்றிருப்பதனால் அன்னாரது பூரண உடல் நலத்துக்காக நாளை (21) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் (ஜவாத்) கலசம்.கொம் இற்கு தெரிவித்தார்.

எமக்காகவும், எமது பிரதேசத்திக்காகவும் இரவு பகல் பாராது நேர்மையான அரசியல் வாதியாய் வாழ்ந்த அன்னாருக்காகவும், அவரின் உடல் நிலை ஆரோக்கியம் பெறவும் வல்ல அழ்ழாஹ்வை இரு கரம் ஏந்தி பிராத்திப்பத்துடன், எமது பிராந்தியத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் நாளை ஜும்மாஆ தொழுகையினைத் தொடர்ந்து அன்னாரின் உடல் நலத்துக்காக துஆ பிராத்தனை செய்யுமாறும் அவர்  மேலும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget