Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மூத்த ஊடகவியலாளர் சலீமுக்கு பாராட்டும், "பொன்விழாக்காணும் சலீம்" நூல் வெளியீடும் !

மூத்த ஊடகவியலாளர் ஏ. எல். எம் சலீம் அவர்களின் 50 வருட சேவையை பாராட்டும் விழாவும், அதனையொட்டி "பொன் விழா காணும் சலீம்" எனும் நூல் வெளியீடும் நேற்று (09) மாலை நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், பிரதியமைச்சர் அமீர் அலி, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் அமைச்சர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில், அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அன்சீல் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

http://www.paylot.lk/http://www.paylot.lk/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget