Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட "தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்" புத்தக வழக்கு !

”தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” என்ற தலைப்பில் வெளியாகியிருந்த புத்தகம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மாளிகாகந்தை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகம் சமூகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பும் நோக்கிலும் அரசியல் தேவை கருதியும் ஒருசிலரால் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். சல்மான் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் வேறொரு நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும், அதில் முக்கிய சில அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றவிசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget