Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பிரித்தானிய "எடின்பார்க்" விருது பெறும் சாய்ந்தமருது இளைஞர்களான சிப்னாஸ், இம்தியாஸ் !

-யூ.கே. காலித்தீன்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் தேசிய இளைஞர் விருது தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரித்தானிய நாட்டின் "எடின்பார்க்" பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருது திட்டத்தில் இளைஞர் கழகங்களின் தலைவர்களான ஏ.ஏ.எம்.அஸ்லம் சிப்னாஸ், எம்.எஸ்.எம்.இம்தியாஸ் ஆகியோர் சர்வதேச வெண்கல விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 2.00 மணிக்கு கொழும்பிலுள்ள பிரதமர் மாளிகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காகவே எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால்  இவ்விருவர்களுக்கும் விருது  வழங்கப்படவுள்ளமை விஷேட அம்சமாகும்.

மேற்படி விருதைப்பெறும் இவ்விருவரும் சாய்ந்தமருது ரிலெக்ஸ், செரண்டிப் இளைஞர் கழகம், சர்வதேச விருதுப்பிரிவின் தலைவர்களும், மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்களும் மற்றும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர்களும் ஆவர்.

இவ் விருதினைப் பெற்றுத்தர பல அர்பனிப்புக்களை செய்த முன்னாள் இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.றிஸான் அவர்களுக்கு சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளனத்தின் சர்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget