Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மாளிகைக்காடு அல் - ஹுஸைன் வித்தியாலய மாணவர் பாராளுமன்றத் தேர்தல் 2017

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மாளிகைக்காடு அல் - ஹுஸைன் வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று (01) சிறப்பாக இடம்பெற்றது.

இப்பாடசாலையின் 20 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற இத்தேர்தலில் 30 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.

மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணையாளராக பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் கடமையாற்றியதுடன், உதவித் தேர்தல் ஆணையாளராக எஸ்.எம்.உவைஸ், வாக்களிப்பு நிலைய பிரதம உத்தியோகத்தராக பிரதி அதிபர் எம்.ஐ.அஷ்ரப், வாக்களிப்பு நிலைய கனிஷ்ட உத்தியோகத்தர்களாக கே.எல்.இப்ராலெப்பை, எம்.எஸ்.முபாரக் ஆகியோரும், வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் அலுவலராக உப அதிபர் ஏ.எம்.பைசர் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.

அதேவேளை இத்தேர்தல் கண்பாணிப்புப் பணிகளில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பாடசாலை இணைப்பாளர்களான ஏ.பி.ஜௌபர், ஏ.ராசிக், சிவசுந்தரமூர்த்தி ஆகியோருடன் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இடம்பெற்ற இத்தேர்தலின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட மாணவர் பாராளுமன்றமானது விரைவில் கூடவுள்ள நிலையில், அதன் முதல் அமர்வில்

சபாநாயகர்
பிரதமர்
சபை முதல்வர்
பிரதி சபாநாயகர்
பிரதி செயற்குழுத் தலைவர்
அமைச்சர்கள்
பிரதி அமைச்சர்கள்
மற்றும் ஆலோசனைச் செயற்குழுக்கள்
என்பன தெரிவுசெய்யப்படவுள்ளன.






Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget