Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கிழக்கு "ஸ்பீட் T 20" கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2017 தொடர்பான ஊடக சந்திப்பு !

-யூ.கே.காலீத்தீன், எம்.வை.அமீர்-
கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ரீ-20  கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை சாய்ந்தமருது பீமா விளையாட்டு நிறுவனமும் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

சர்வதேச மற்றும் தலைநகர, விளையாட்டு உபகரணங்கள் வழங்குநர்களான
SPEED Sports Company Ltd, India  Khazana Sports, Colombo ஆகியவற்றின் பிரதான மற்றும் இணை அனுசரணையில் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக இடம்பெறும் ஒரு பிரமாண்ட சுற்றுப் போட்டியாக இது அமையவுள்ளது.

இதனை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பும், போட்டிக் குலுக்கலும் இன்று (19) சாய்ந்தமருது சி பிரீஸ் உணவகத்தில், போட்டியின் பிரதம ஏற்பாட்டாளரான ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் அலியார் பைசர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு கஸானா ஸ்போர்ட்ஸ் அதிபரும் இணை ஏற்பாட்டாளருமான அல் - ஹாஜ் எம். அஸ்கர் அலி கலந்துகொண்டதுடன், அதிதிகளாக ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின்தலைவர் ஏ.ஆதம்பாவா, உபதலைவர் யூ.எல்.அபுல் ஹஸன், விளையாட்டு அதிகாரி எம்.பீ.எம். ராஜாயீ, இக்ரா மொபைல் அதிபர் யூ.எல்.சத்தார். இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான எப்.எம்.தில்சாத், இசட்.எம்.ஸாஜித் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் , இச்சுற்றுப்போட்டியின் முதலாம் பரிசாக ரூ. 100,0000.00 உம்  வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாம் பரிசு ரூ. 50,000.00, சுற்றுப்போட்டி நாயகனுக்கு ரூ. 22,000.00 பெறுமதியான துடுப்பு மட்டை, சிறந்த துடுப்பாட்ட வீரர்,  பந்துவீச்சாளர், களத்தடுப்பாளர் , விக்கற் காப்பாளர் ஆகியோருக்கு தலா ரூ. 5000.00 பெறுமதியான காலணிகள் வழங்கப்பட உள்ளதுடன், இவர்களுக்கு இந்திய சுற்றுலாவுக்கான வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது மட்டுமல்லாது, அவர்களுக்கு இலங்கை இராணுவ அணியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

அதேபோல் இச்சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பாக 20 அணிகளும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக 8 அணிகளும், திருகோணமலை மாவட்டம் சார்பாக 4 அணிகளுமாக மொத்தம் 32 அணிகள் களமிறங்கவுள்ளன.

பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இச்சுற்றுப்போட்டியானது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிவரை அனைத்துப்போட்டிகளும் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget