Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சத்தியாக்கிரகம் நடாத்தும் பட்டதாரிகளுடன் NFGG சந்திப்பு!

கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்று (25) காலை சந்தித்தார். 

இச்சந்திப்பில் NFGGயின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழீமி அவர்களும் மற்றும் NFGG யின் ஏறாவூர் பிரதேச செயற்குழு உறுப்பினர் MLM.சுஹைல் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டனர்.

தமக்கான அரசாங்க நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி கடந்த ஐந்து நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியான சத்தியாக்கிரக  கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொள்ளு முகமாகவும், அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குமுகமாகவும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் NFGGயிடம் முன்வைத்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளிலும் பட்டப்படிப்புக்களைப் பூர்த்தி செய்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 4500 பட்டதாரிகள் வேலை வாயப்புக்காக காத்துக் கொண்டிருபப்பதாகவும், கடந்த காலங்களில் பல்வேறு வகையிலான வாக்குறுதிகள் மாகாண மற்றும் மத்திய அரசாங்க பிரதிநிதிகளால் வழங்கப்பட்ட போதிலும் அவையெதுவும் இது வரை நிறைவேற்றப்பட வில்லை யெனவும் தமது விரக்தியினையும் கவலையினையும் அவர்கள் தெரிவித்தனர்.  அத்தோடு விசேடமான தெரிவுப் பரீட்சை நடாத்துகின்ற முறையினைத் தவிர்த்து தமது கல்வி பின்புலத்திற்கேற்ற அரச தொழில் நியமனங்களை இன்னும் தாமதிக்காமல் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அத்தோடு தமது கோரிக்கையடங்கிய மனு ஒன்றினையும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானிடம் கையளித்ததோடு தமக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளை வழங்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்..
"உங்களது பிரச்சினைகளை உணர்வு பூர்வமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நிலவும் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அறிவு பூர்வமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் இதனைக் கையாள வேண்டும்.
இது தொடர்பிலான நடவடிக்கையின் முதற்படியாக உங்களது போராட்டத்தினையும், உங்களது கோரிக்கைகளையம் பிரதம மந்திரி, ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அதனைத் தொடர்ந்து உங்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்தி சாத்தியப்படுத்தக்கூடிய சில புள்ளி விபரங்களை அவசரமாகத் திரட்ட வேண்டும். அதனை நீங்களும் நாங்களுமாகச் சேர்ந்து திரட்டி இந்தப் பட்டதாரிகளை எவ்வாறான ஒரு பொறி முறையின் ஊடாக நியமனங்களுக்கு உள்வாங்க முடியும் என்கின்ற ஒரு முன்மொழிவினை நாம் தயாரித்து சமர்ப்பிப்போம். அது நமது பிரச்சினைகளை இலகு படுத்தி தீர்வுகளை சாத்தியப்படுத்தும்"  எனத் தெரிவித்தார்.

NFGG பிரதிநிதிகள்  வழங்கிய ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட அந்தப் பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகள் அவசியமான புள்ளி விபரங்களைத் திரட்டி அடுத்த வார இறுதிக்குள் சமர்ப்பிப்பதாகவும் உறுதியளித்தனர்.
-NFGG ஊடகப் பிரிவு-

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget