Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவங்களை ஒன்லைன் மூலமாக நிரப்புதல் பயிற்சி!

-எம்..எம்.அஸ்ஹர்-
கல்முனை ,சாய்ந்தமருது கல்வி ஆய்வு அபிவிருத்தி சபை ( Counc il for Education, research and development )  ஒழுங்கு செய்திருந்த 2016 /2017 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவங்களை ஒன்லைன் மூலமாக நிரப்புதல் , சரியான பொருத்தமான பாடநெறிகளை தெரிவு செய்தல் சம்பந்தமான ஆலோசனை வழங்குவதற்கான கருத்தரங்கு கடந்த வியாளக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் அபிவிருத்தி சபையின் தலைவர் எம்.ஐ.எம்.சதாத்  தலைமையில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தெளிவினை பெற்றுக் கொண்டனர்.

கல்முனை, சாய்ந்தமருது கல்வி ஆய்வு அபிவிருத்தி சபை கல்முனை வலய கல்விப் பணிமனையின் கணினி வளநிலையத்துடன்  அதாவது பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவினால் ஒன்லைன் மூலம் பதிவிற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து முற்றிலும் இலவசமாக  இக்கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தது.

இக் கருத்தரங்கில் கல்முனை வலய கணினி வளநிலைய வளவாளர் எம்.எம்.ஏ.ஜஹான்  அமைப்பின் செயலாளர்  றிஸாத் சரீப் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget