Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

உள்ளுராட்சி தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கைக்கு மனோ கணேசன் எதிர்ப்பு!

-அஷ்ரப் ஏ சமத்-
அமைச்சா் மனோ கனேசன் தலைமையிலாான தமிழ் முற்போக்கு முன்னணி கட்சியை அங்கிகரிக்குமாறு கோரி இன்று தோ்தல் ஆணையாளரிடம் ஆவணங்கள்  கையளிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசன் எதிா்வரும் உள்ளுராட்சி தோ்தல் முறை எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கைகளை தாம் எதிா்ப்பதாக தெரிவித்தார்.
இன்று (28) தோ்தல் திணைக்களத்தில் வைத்து ஊடகவியலளாா்கள் மத்தியில் கருத்து தெரவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரவித்தாா்.
அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில்
உள்ளுராட்சி தோ்தல் முறைமையில் சிறுபாண்மையினருக்கும் சிறிய கட்சிகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 5500 ஆக இருந்த உள்ளுாரட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது  11 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் முன்னாள் அமைச்சா் அதாவுள்ளா காலத்தில் கலப்பு முறை 40 வீதம் வட்டார முறை 60 வீதம் அனுமதிக்கப்பட்டதை, தற்பொழுது வட்டார முறை 73 வீதமும் கலப்பு முறை 27 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
கொழும்பு மாநகர சபையில் காணப்பட்ட உறுப்பினர்களது எண்ணிக்கை 53 இல் இருந்து 83 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இம்முறையினால் பெரிய இரு கட்சிகளுக்குமே சா்ந்தா்ப்பம் உள்ளது. சிறிய கட்சிகள் வட கிழக்கு தவிா்ந்த ஏனைய பிரதேசங்களில் முஸ்லீம் மலையக மக்கள் சிங்கள மக்களோடு கலந்து வாழும் பிரதேசங்களில் சிறுபாண்மை உறுப்பிணா்களை இழக்க வேண்டி ஏற்படும். ஆனபடியால்தான் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி உள்ளிட்ட  19 பாராளுமன்ற உறுப்பிணா்கள் இப்புதிய  தோ்தல் முறைமையை எதிா்க்கின்றோம்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி யும் ஆதரவளித்தால்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  50 பேர் சோ்ந்து பாராளுமன்றத்திலும் போராடுவோம்.
தற்போதைய மாகாண உள்ளுராட்சி அமைச்சா் பைசா் முஸ்தபா, வா்த்தமாணி அறிவித்தலுக்கு முன் இம் தோ்தல்முறைமை பற்றி மறுபரீசீலனை செய்தல் வேண்டும். எனவும் அமைச்சா் மனோ கனேசன் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget