Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

விளையாட்டு மற்றும் உடலாரோக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சைக்கிளோட்டம் !

-யூ.கே.காலித்தீன்-
ஜனாதிபதி செயலகம், விளையாட்டுத்துறை  அமைச்சு, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  விளையாட்டு மற்றும் உடலாரோக்கிய தேசிய வாரம் இன்று (6) சாய்ந்தமருது பிரதேசசெயலகத்தில் பதில் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா தலைமையில் தேசியகொடி ஏற்றிவைக்கப்பட்டு சைக்கிலோட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடுபூராக ஆரம்பித்து வைத்துள்ள "நலம் மகிழ்ச்சி வெற்றிக்கான விளையாட்டு" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.நஜிமுடீன், விளையாட்டு உத்தியோகத்தர், ஏ.நிசாந்தன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விளையாட்டுத்துறை அமைச்சு நாடு முழுவதிலும் விரிவான ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிகழ்வானது இன்று 6ஆம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget