Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

‘எடின்பார்க்’ விருதுபெறும் சாய்ந்தமருது ஸாஜித் !

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின்  தேசிய இளைஞர் விருது தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரித்தானிய நாட்டின் ‘எடின்பார்க்’ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் அம்பாறை மாவட்ட  இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜித், சர்வதேச ‘வெண்கல’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 2.00 மணிக்கு கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில்  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவருக்கான விருது வழங்கப்படவுள்ளது. இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் இவர் சாய்ந்தமருது ஜீனியஸ்7 இளைஞர் கழகத்தின் தலைவரும் மற்றும் பிமா விளையாட்டு கழக தலைவரும் சர்வதேச பொது நலவாய இளைஞர் மன்றத்தின் உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் இளைஞர் தன் ஆர்வாளர்கள் அமைப்பின் பிரதிநிதியுமாவார். இலங்கையில் மற்றும் சர்வதேச ரீதியில்  இடம்பெற்ற சர்வதேச இளைஞர் மாநாடுகளில்  மற்றும் பல்வேறு நிகழ்வில் பங்கேற்றவர். 

மேலும் இவர் வியாபார முகாமைத்துவ பட்டதாரியுமான இவர் . சாய்ந்தமருது  க/மு கலவன் (G.M.M.S), கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவருமான இவர்  அல்-ஹாஜ் ஸமான் பைரோஸ் தம்பதியின் மூத்த புதல்வர் ஆவர்.


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget