Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஜ.எஸ்.ஏ இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் சுநத்திர தின விழா !

-அஷ்ரப். ஏ. சமத்-
69வது சுநத்திர தினத்தில் கிரான்பாசில் உள்ள ஜ.எஸ்.ஏ இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் தலைவா்  ஏ.ஆர்.எம் சபான் அவா்களின் தலைமையில் கொழும்பு கிராண்பாஸ் வாழும் வறிய குடும்பங்களுக்கு பாதணிகள் மற்றும் அப்பியாச புத்தகங்கள் வழங்களும் சுதந்திர கொண்டாட்ட வைபவமும் பெப்ரவரி 04 கிராண்பாஸ் விஜயபா மாகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் கலந்து கொண்டாா். அத்துடன் முஸ்லீம் கவுன்சில் தலைவா் என். எம். அமீன், கிராண்பாஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரேமரத்தின விதானகே  , விஜயபா வித்தியாலய அதிபா்  வேரகம, விமலசேன தேரா் கலந்து கொண்டு சுதந்திரம் தினம் பற்றியும்,  கொழும்பு மத்திய பிரதேச வாழ் பெற்றோா்களுக்கு கல்வியின் முக்கியத்துவம்  பற்றி விசேட சொற்பொழிவும் இடம்பெற்றது. 

இங்கு உரையாற்றிய கிராண் பாஸ் பொலிஸ் நிலையத்தின்  பிரஜா பொலிஸ்  பொறுப்பதிகாரி - பிரேமரத்தின விதானகே 

கிராண்பாஸ் பிரதேசத்தில் 13 பாடசாலைகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 800 மாணவ மாணவிகள் தமது கல்வியை இடை நடுவில் விட்டுவிடுகின்றனா். இவ்வாறான குடும்பங்களினை நேரடியாகச் சென்று பரிசீலனை செய்தபோது இம்மாணவா்களது குடும்பங்கள் மிகவும் வருமைக் கோட்டில் வாழ்கின்றனா். தமது கல்வியைத் தொடரக் கூடிய வசதி வாய்ப்புக்கள் இம்மாணவா்களுக்கு இல்லை. சிறுவயதிலேயே அவா்கள் கல்வியை இடைநடுவில் விட்டு விட்டு வீதிகளிலும், வீடுகளிழும் முடங்கிக் கிடக்கிற்னா். சிலா்   கையடக்கத் தொலைபேசி ஊடாக காலத்தை கழிக்கின்றனா். சிலா்  தொலைக்காட்சி, சினிமா பாா்ப்பதிலும்  தமது கல்வி கற்கும் காலத்தினை வீனாக  கடத்துகின்றனா்.  வேறு சிலா் சிறு பிராயத்திலேயே   தொழிகளைச்  செய்கின்றனா்.  மற்றும்   போதை, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இப் பிரசேத இளைஞா்கள் ஈடுபடுகின்றனா். 

இவ்வாறான பிள்ளைகளது   பெற்றோா்கள் செல்வதெல்லாம்  தமது வாழும் சூற்றாடல் மற்றும் . வருமை,  குடியிருப்பு வசதிகள்   இல்லாமை  பெற்றோா்கள் மத்திய கிழக்கு நாடுகளில்  உள்ளனா்.  சில குடும்பப் பிரச்சினை காரணமாக குடும்பங்கள் பிரிவுகள்  போன்ற  பிரச்சினைகளினாலும்  பிள்ளைகள்  இந் நிலைக்கு ஆழாகின்றனா்.   கல்விக்காக உதவக் கூடிய  தனவந்தா்கள் அரசியல் வாதிகள் நலன்விரும்பிகளும் முன் வந்தால் இவ்வாறான மாணவா்களை வழிநடாத்தி பாடசாலைக் கல்வியை 1-13 ஆண்டு வரை  கட்டாயப்படுத்தி நல்ல ஒழுக்க சீலா்களாக மாற்றமுடியும் என பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி . விதானகே அங்கு உரையாற்றினாா். 

 பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான அங்கு உரையாற்றுகையில்   

 இலங்கை சுதந்திரம் பெறும் பொது கலாநிதி டி. பி. ஜாயா கொழும்பு மத்திய பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பிணராக இருந்தாா்.  இந்த நாட்டில் என்னதான் உள் பிரச்சினைகள் இருந்தாலும் முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்காவுடன் இணைந்து நாம்  பௌத்தா்,  தமிழ் முஸ்லீம், கிரிஸ்த்தவா் எல்லோரும் இலங்கையா்  என்ற போா்வையில் நாம்  முதலில் வெள்ளளையா்களிடம் இருந்து  சுதந்திரத்தை பெற்ற பின்  நமது உள்வீட்டுப் பிரச்சினைகளை பேசிக் கொள்வோம் என அறிவுரை கூறி சகல சமுகங்களின் தலைவா்களும் இணைந்து தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தனா். 

 அப்போது சிங்கப்புர் பிரதமா் இலங்கை வந்தபோது எனது சிங்கப்புரையும் ஒரு இலங்கைபோன்று மாற்றிக் காட்டுவேன் என்று சொன்னாா். ஆனால் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கின்றோம். எமக்கு பின்னா் வந்த சிங்கப்புர் தற்பொழுது எந்த அளவுக்கு அபிவிருத்தியில்  முன்னேறி உள்ளது. நாம் தற்பொழுது சிங்கப்புருக்கு மருத்துவம் ,க ல்வி தொழில் வா்த்தக நடவடிக்கைக்காக செல்கின்றோம். நாம் எல்லோரும் இலங்கையா் என்ற உணா்வில் செயல்பட்டிருந்தால் நாம் முன்னேறியிருக்கலாம். நாம் மத, இன, குல, வா்க்க வித்தியாசங்களைக் காட்டி இன்ரும் பிரிந்து நிற்கின்றோம். என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் அங்கு உரையாற்றினாா்.
 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget