Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா !

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்வியமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை பிரதிபலிக்கும் என்ற தொனிப்பொருளில் பாடசாலைகளில் சமய நிகழ்வுகளை தேசிய விழாக்களாக அனுஸ்டிக்கும்படி வழங்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கமைய காரைதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் .எல்.எம்..நழீர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்றது.

காரைதீவு கோட்ட கல்வி பணிப்பாளர் பரதன் கந்தசாமி பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள ஆசிரியர்களும் மாணவர்களும் காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்களான காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி அதிபர்  வித்தியராஜன் காரைதீவு கண்ணகி வித்தியாலய அதிபர் சுந்தரராஜன் மாவடிப்பள்ளி அல் அஸ்றப் மகா வித்தியாலய அதிபர் எம்..சரீப்தீன் மாளிகைக்காடு சபீனா வித்தியாலய அதிபர் எம்..எம்.அஸ்மி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காரைதீவு ஆர்.கே.எம்.பெண்கள் பாடசாலை அதிபர் எம்.மணிமாறன் தேவாரம் பாடி அட்டானைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை பயிற்சி ஆசிரியர் எம்.பீ.கே.சைமன் பௌத்தமத ஆசியினையும் பாடசாலை பிரதி அதிபர் .எம்.பைஸர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியினை ஆரம்பித்தனர்.
வெவ்வேறு சமயங்களை பின்பற்றுவோர் ஒவ்வொரு சமயத்தினதும் சடங்குகள் கலாசார நிகழ்வுகளை அறிந்து கொள்வதன் மூலம் இனங்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகள் நீங்கி ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துனர்வும் ஏற்பட்டு எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் இலங்கையர் என்ற உணர்வுடன் வாழ பழகிக் கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் வழிவகுக்கும்.

மூன்று இனங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.

 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget