Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

நல்லாட்சி அரசிற்கு பட்டதாரிகள் என்ன தெருவோர நாய்களா....?


-பழுலுல்லாஹ் பர்ஹான்-
நேற்று 24 வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் மட்டக்களப்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினைத் தொடர்ந்து வரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களான பஸ் நிலையம் ,பொதுச் சந்தை உள்ளிட்ட இடங்களிலும்,சுவரொட்டிகள் ஒட்டும் இடங்களிலும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் அதிகளவாக ஒட்டப்பட்டிருந்தன.

குறித்த சுவரொட்டிகளில் ......
நல்லாட்சி அரசிற்கு பட்டதாரிகள் என்ன தெருவோர நாய்களா....?
நல்லாட்சி அரசில் ஏன் அதிகரித்தது? வேலையில்லா திண்டாட்டம்,பட்டதாரிகளை படுகுழியில் தள்ளாதே,அரசே வேலையில்லா பட்டம் எதற்கு?,
நல்லாட்சி அரசிற்கு பட்டதாரிகள் என்ன தெருவோர நாய்களா?,
இன்று அதிகாரிகள் அரியனணயில் பட்டதாரிகள் பாதைவழியே,வேலையில்லாத பட்டம் எதற்கு? 
எமது நேரத்தை வீணடிக்காதே, இளைய சமூகமே பட்டம் பெறுவது பற்றி சிந்தி!,
பட்டம் பெற்றது பாதையில் கிடக்கவா?,
அரசியல் வாதி உனக்கு கோட்டா, பட்டதாரி எமக்கு ரோட்டா?
அரசியல்வாதிகள் தூங்குவதற்கே பாராளுமன்றம் பட்டதாரிகள் எமக்கோ பாதையோரம்,
அரச வேலைவாய்ப்பில் பாரபட்சம் ஏன்?,
பொய் வாக்குறுதியால் எம்மை பொல்லாதவர் ஆக்காதே,
அரசே பட்டதாரிகளை முட்டாளாக்காதே,
நலிவடையும் நல்லாட்சி 
பட்டதாரிகள் நாம் தெருவோர கண்காட்சியா,
தகுதிகான் பட்டதாரிகளுக்கு வேலைகொடு 
அரசே,பல்கலைக்கழகத்தில் பட்டம் கொடுப்பது பாதையோரத்தில் படுக்க வைக்கவா? 
போன்ற வசனங்கள் எழுதப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget