Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்களுக்கு உதவித் திட்டம் !

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்திருந்த சபையின் அங்கத்தவர்களுக்கு உதவும் திட்டத்தின் அடிப்படையில் அங்கத்தவரொருவருக்கு நலன்பேண் உதவித்தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் சபையின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

சமூக வலுவுட்டல் நலனோம்பல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயகாவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபையின் ஸ்தாபக தலைவருமான ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சபையின் கடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையின் அங்கத்தவர்களுக்கு ஏற்படும்  எதிர்பாராத நிகழ்வொன்றின் போது அவரின் கஸ்டத்தைப் போக்கி அவரின் இன்ப துன்ப நிகழ்விற்காக உதவிக்கரம் நீட்ட ” நலன்பேண் ” உதவித் தொகை வழங்குவதாக ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய முதன்முதலாக அங்கத்தவரொருவருக்கு காசோலை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் சமூகமளித்திருந்தனர்.

 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget