Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

"ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்" கவிதை நூல் அறிமுக விழா !

-யூ.கே. காலித்தீன்-
கரைவாகு கலை இலக்கியச் சந்தியின் 6வது அமர்வு, மாளிகைக்காடு, அல்-ஷபினா வித்தியாலத்தின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் எஸ். ஜனுஸ் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகான அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும், லண்டனில் வசிப்பவருமான கவிஞர் மார்க் ஜனார்த்தன் எழுதிய "ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்" கவிதை நூல் அறிமுக விழாவினை அவரது தாயார் திருமதி ஜெகதீஸ்வரன் விஜயலட்சுமி வெளியீட்டு வைக்க நூலுக்கான அறிமுக உறையினை கவிஞர் மன்னார் அமுதனும், நூல் நயத்தினை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்தும், கவிஞர் ஏ.எம்.சாஜீத் நூல் ஆய்வினையும் செய்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கவிஞர் றமிஸ் அப்துல்லாஹ்வின் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது அமர்வாக கரைவாகு இலக்கிய சந்தி பெருமையுடன் வழங்கிய கவிதைகளுக்கான "சோலைக்கிளி விருது 2015"  விழா முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட கவிஞர் மன்னார் அமுதன் எழுதிய "அன்னா யாவினும்" கவிதை நூலுக்கு 15,000ரூபா பணப்பரிசினையும் விருதினையும் பெற்றுக் கொண்டார்.
மேலும் ஐந்து கவிதைகளுக்கான ஆறுதல் பரிசுகளாக தொடராக நுவரெலியா டிக்கோயா கவிஞர் சு. தவச்செல்வன் எழுதிய "டார்வின் பூனைகள்", கிண்ணியா கவிஞர் ஏ.கே. முஜாரத் எழுதிய "சாத்தான் வழிந்தோடும் சொற்கள்", தம்பிலுவில் கவிதாயினி ஜெகா எழுதிய "விடை தேடி", பாலமுனை கவிஞர் முவித் எழுதிய "உடைந்த கால்கள்" மற்றும் ஓட்டமாவடி கவிஞர் றியாஸ் எழுதிய "முகவரி இழந்த முச்சந்தி" ஆகிய ஐந்து கவிதைகளுக்கான விருதுகளும் பாராட்டு பாத்திரமும் மற்றும் போக்குவரத்து செலவுக்கான தொகை என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.

கரைவாகு இலக்கிய சந்தி கவியரங்குக்கு கவிஞர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் உட்பட தனவந்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget