Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்திக்கு மேலும் நிதி ஒதுக்கீடு!

-அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்முனை சாஹிபு வீதியில் ஆயுர்வேத வைத்தியசாலையினை செயற்படுத்துவதற்குத் தேவையான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான நிதி தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் குழுவினர் இன்று (8) புதன்கிழமை குறித்த வைத்தியசாலைக்கு விஜயம்செய்தனர்.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சாஹிபு வீதியில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினை வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, நோயாளர் விடுதி, மருந்தகம் போன்ற வசதிகளைக் கொண்டதாக இயங்கச் செய்வதற்கு ஏற்றவகையிலான உள்ளக அபிவிருத்திகள் நடைபெற்றது. 

பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக மேற்படி வேலைத்திட்டத்திற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் 3 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார். 

இருந்தபோதிலும் குறித்த வைத்தியசாலையினை இயங்கச் செய்வதற்கு மேற்படி வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக சில தேவைகள் உணரப்பட்டுள்ளமையினால் அத்தேவைகளையும் நிவர்த்தி செய்து விரைவில் மக்கள் பயனடைவதற்கு வழிவகுக்குமாறு பிரதி அமைச்சரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேலும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மாகாண சுகாதார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். 
    
இதற்கமைவாக குறித்த வைத்தியசாலையின் மேலதிக தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஏதுவாக மதிப்பீட்டினை மேற்கொள்ளும் வகையில் மேற்படி குழுவின் விஜயம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget