Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது கிங் ஹோசஸ் விளையாட்டு கழகத்துக்கு புதிய சீருடை அறிமுகம்!

-யூ.கே. காலித்தீன்-
இப்பிராந்தியத்தில் தலைசிறந்து விளங்கும் சாய்ந்தமருது  ஹிங் ஹோசஸ் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு கடின பந்து கிறிக்கட் போட்டிகளுக்கான  புதிய சீருடை அறிமுக நிகழ்வு சாய்ந்தமருது சீ பிறீஸ் உணவகத்தில்  கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.ஏ.முஹம்மட் தலைமையில் அதன் செயலாளர் ஏ.சீ.எம்.நிஷாருடைய வழிநடத்தலில் நேற்று (18) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிரேட் டலண்ட் ரேடிங் கொம்பனியின் பணிப்பாளர், தொழிலதிபர் எம்.பஸ்மீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சீருடைகளை வழங்கி வைத்தார்.
மேற்படி நிகழ்வுக்கு  பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர்  எம்.எம். உதுமாலெவ்வை, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இசட்.எம்.சாஜித், சமூர்த்தி மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் ஏ.எம்.ஜாஹிர் மற்றும் சாய்ந்தமருது-மாளிகைகாடு வர்தக சங்க செயலாளர் யூ.எல். அப்துல் சத்தார், விளையாட்டு அதிகாரி எம்.பி.எம்.ராஜாயீ ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
சீருடை வழங்குதல் மற்றும் நிகழ்வுக்கு பூரண அனுசரணையை தொழிலதிபர் எம்.பஸ்மீர் வழங்கியதோடு ஒரு தொகை விளையாட்டு உபகரணங்களையும் கழகத்துக்கு வழங்கி வைத்தார்.
ஹிங் ஹோசஸ் விளையாட்டுக்கழகத்தினால் பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget