Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சுதந்திர திணத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவுப் பொருட்கள் !

-பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை திரு நாட்டின் 69வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் மொனாஷ் ஆங்கில அகடமி ஏற்பாடு செய்த தேசிய சுதந்திர தின நிகழ்வு நேற்று முன்தினம் 4 சனிக்கிழமை காத்தான்குடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது மொனாஷ் ஆங்கில அகடமியில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளினால் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு பழங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் பிஸ்கட் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மொனாஷ் ஆங்கில அகடமி மாணவர்கள் வருடா வருடம் 69வது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget