Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை - கொழும்பு தனியார் பேரூந்துகள் பணி பகிஸ்கரிப்பு ; பயணிகளுக்கு சிரமம் (வீடியோ)!

கல்முனை - கொழும்பு வழித்தடத்தில் சாலை அனுமதி இல்லாமல் தனி நபர் ஒருவரது 4 சொகுசு பேரூந்துகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும், இதன்காரணமாக சாலை வழித்தடம் (ரூட் பெர்மிட்) பெற்றுள்ள சுமார் 20 ஏனைய பேரூந்துகள் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் போலீசார் பாராபட்சமாக செயற்படுவதாகவும் கூறி தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர் சங்கம் இன்று (26) இரவு 8.30 மணி தொடக்கம் காரைதீவு பிரதான வீதியில் பகிஸ்கரிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
இதன்காரணமாக அவ்வீதியில் வாகனப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் தூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் பாரிய சிரமங்களுக்கு முகண்கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருடன் இச்சர்ச்சை தொடர்பில் கலந்துரையாடி நிலைமையை சமரசத்துக்கு கொண்டுவந்தார்.

அதனையடுத்து இரவு 10.30 மணியளவில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

சம்பவ இடத்தின் நிகழ்நேரக் காட்சிகள் கீழே வீடியோ காட்சியாகத் தரப்படுகின்றது.

http://www.tv.kalasem.com/2017/02/blog-post.html 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget