Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதில் "ஹிப்ழு" மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'ஸஹாபா' பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

-யூ.கே.காலீத்தீன்-
சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாபீடத்தில் குர்ஆன் மணன கற்கையில் ஈடுபட்டுள்ள ஹிப்ழு மாணவர்களுக்காக எம்.எப்.சி.டீ. நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 'ஸஹாபா' எனப் பெயர் சூட்டப்பட்ட பள்ளிவாசல் இன்று (18) மதியம் லுஹர் தொழுகையுடன் திறந்துவைக்கப்பட்டது.

கலாபீடத்தின் தலைவர் அல் - ஹாஜ் மௌலவி. யூ.எல்.எம்.காஸிம் (கியாதி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல் - ஹாஜ் வை.எம். ஹனீபா மற்றும் எம்.எப்.சி.டீ. மாவட்ட இணைப்பாளரும் , இக்கலாபீடத்தின் பிரதித் தலைவருமாகிய சட்டத்தரணி என்,எம், முஜீப் (நளீமி) ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

இப்பள்ளிவாசல் நிர்மாணிப்பு தொடர்பில் இங்கு முஜீப் (நளீமி) கருத்துத் தெரிவிக்கையில்.

இப்பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஒரு சில எதிர்ப்புகள் தோன்றியிருந்தது. காரணம் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கத்தக்கதாக அதன் அருகில் இன்னுமொரு பள்ளிவாசல் தேவையில்லை என்ற ரீதியிலேயாகும். ஆனபடியால் இது தொடர்பில் எமது அமைப்பானது சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக இதனை நிர்மாணிப்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதியிலேயே இதனை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது.

"ஹிப்ழு" கற்கை நெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் வெறுமனே குர்ஆணை மாத்திரம் கற்றுவிட்டு செல்பவர்கள் கிடையாது. பொதுவாக பள்ளிவாசல்களில் ஹாபிழ் களை கண்டால் அவர்களை இமாமாக தொழுவிக்கும்படி அழைப்பது வழமை. ஆனபடியால் அவர்கள் குர்ஆணை கற்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் முறையான தொழுவித்தல் பயிற்சிகளில் ஈடுபடுதல் அவசியமாகின்றது.

இதனை பொதுமக்கள் வழமையாக பயன்படுத்தும் பள்ளிவாசல்களில் செயல்முறைப்படுத்துவதில் பல நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

ஆனபடியால்தான் இம்மாணவர்களின் பயிற்சித்தேவையினை பூர்த்தி செய்வதற்காக வேண்டி முற்றுமுழுதாக இந்த மாணவர்களுக்காகவே இப்பள்ளிவாசலானது நிர்மாணிக்கப்பட்டுள்ளதே தவிர, பொதுமக்களுக்காக அல்ல. பொதுமக்கள் அவர்கள் வழமையாக பயன்படுத்திவரும் பள்ளிவாசலினை தொடர்ந்தும் பயன்படுத்திவரலாம்.

ஆனபடியால் இனிமேலும் இது தொடர்பான வீண் தர்க்கங்களில் ஈடுபடுவதை விட்டும் தவிர்ந்து அல்லாஹ்வின் மாளிகையை உயிரூட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாபீடத்தின் நிர்வாகிகள், சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையினர், எம்.எப்.சி.டீ. நிறுவன உத்தியோகத்தர்கள், கலாபீட அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget