Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பஸ் வண்டி விவகாரத்தில் வம்புக்கு இழுக்கப்பட்டதா? ஸாஹிரா கல்லூரி; நடந்தது என்ன?

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களால் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு பஸ் வண்டி ஒன்றை வழங்க இருந்ததாகவும், அதற்கான அவரின் அழைப்பை குறித்த பாடசாலை நிர்வாகம் புறக்கணித்ததாகவும், அதனால் அந்த பஸ் வண்டியை அவர் வேறு ஒரு பாடசாலைக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும், அதன் பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுவதாகவும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் செய்திகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கலசம்.கொம் ஸாஹிரா கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோரை தொடர்புகொண்டு இருவருக்குமிடையில் நேரடித் தொலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடு செய்து விவகாரத்தின் தெளிவுநிலையை கேட்டறிந்தது.

அவ்வுரையாடலில்...

அதிபர், கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களிடம் ..., 
மேற்கூறப்பட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், தங்களிடம் எமது கல்லூரிக்கு ஒரு பஸ் வண்டியை வழங்கும் ஒரு உயரிய எண்ணம் இருக்குமாயின் அதனை தாம் பெரிதும் வரவேற்பதாகவும் , தங்கள் இக்கல்லூரியின் பழைய மாணவர் என்ற ரீதியிலும் , இப்பிரதேச அரசியல்வாதி என்ற வகையிலும் குறித்த உதவியை கட்டாயம் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு சிராஸ் ... ,
ஆம், எனது எண்ணத்தில் அவ்வாறான ஒரு நிலைப்பாடு உள்ளது, அதனை எனது நெருங்கிய அரசியல் சகாக்களிடம் பகிர்ந்துகொடேனே தவிர, யாரிடமும், குறிப்பாக உங்களிடமும் இன்னும் இவ்விடயம் தொடர்பாக நேரடியாக கதைக்காத நிலையில் இது போன்ற ஒரு செய்தி பரவியுள்ளது வருத்தத்தை தருகிறது. என்றதுடன் இனிவரும் நாட்களில் இதுதொடர்பில் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவும் சம்மதம் தெரிவித்ததுடன், இந்த பஸ் வண்டி தொடர்பில் வேறு யாருக்கும் நான் வாக்குறுதி எதுவும் வழங்கவில்லை என்றார்.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget