Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டியில் தாறுல் இல்மா இல்லம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்,  எஸ்.எம்.எம்.றம்ஸான்-
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இன்று (15) பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும், ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா விசேட அதிதியாகவும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச பாடசாலை அதிபர்கள்  விளையாட்டுதுறை பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ பாவா  விளையாட்டுத்துறை ஆலோசகர் ஓய்வுபெற்ற அம்பாறை  மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் விளையாட்டுப் போட்டியினை கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் உத்தியோகபுர்வமாகவும் ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலை உதவி அதிபரும் போட்டி பணிப்பாளருமான  ஐ.எல்.எம்.ஜின்னாவின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் தாறுல் இல்மா இல்லம் ( நீலம்) 30 தங்கப் பதக்கங்களை வென்று முதலாம் இடத்தையும்,  தாறுல் ஹிக்மா இல்லம் ( பச்சை ) 29 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தையும், தாறுல் நிஹ்மா இல்லம் ( சிவப்பு) 21 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இல்ல விளையாட்டுப் போட்டியின் போது மாணவிகளின் உடற்பயிற்சி கண்காட்சி அனைவரினதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டதுடன் பிரதம அதிதி கௌரவ அதிதிகளினால் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பரிசளிப்பு நிகழ்விற்கு முன்னராக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் பாடசாலை அதிபர் உள்ளிட்ட கல்வி சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

http://www.tv.kalasem.com/2017/02/kalmunai-al-misbah-mv-sports-meet-final.html 

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget