அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசமான கல்முனை
மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தின் நடுத்துறை கடற்கரை
பிரதேசத்தில் இன்று (14) காலை வீசிய மினி சூறாவளியின் காரணமாக கடற்கரை வீதி ஹசனாத் பள்ளிவாசலின்
குர்ஆன் மதரஸாவினதும், வாடிகளினதும், சில கட்டடங்களின் கூரைகளும், தோணிகளும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment