Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மஹாத்மா காந்தி விருதுக்கு மாவட்டத்தின் முதல் 6 இடங்களையும் பெற்று கல்முனை ஸாஹிரா சாதனை !

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் முதல் ஆறு இடங்களை கல்முனை ஸாஹிர தேசியக் கல்லூரி  மாணவர்கள் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.

இலங்கையில் க.பொ.த.உயர்தர வகுப்புகளில் தற்போது  கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு  கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படுகின்ற மகாத்மா காந்தி புலமைப்பரிசிலுக்காக 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்  நாட்டின் சகல மாவட்டங்களில் இருந்தும் ஒரு மாவட்டத்திற்கு 6 மாணவர்கள் வீதம் 150  மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களான ஏ.எம்.எம்.ஆதில் ( 9 ஏ ) எம்.ஆர்.ஆசிக் ( 9 ஏ ) யு.எல்.எம்.அப்ரித் ( 9 ஏ ) ஜே.எஸ்.ஏ.எம்.சிஹாப் ( 8 ஏ 1 பீ ) ஏ.அஹமட் சிபி ( 9 ஏ ) ஐ.எம்.இல்ஸாம் அல் ஹக் ( 9 ஏ ) ஆகியோர்  இப்புலமைப்பரிசில் பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து  மகாத்மா காந்தி புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரே பாடசாலையிலிருந்து 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும் என கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தெரிவித்துள்ளதுடன் அதிபர் உள்ளிட்ட பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சபை பழைய மாணவர் சங்கம் என்பன  இம்மாணவர்களுக்கும்  ஆசிரியர்களுக்கும் பகுதித்தலைவராக இருந்த எம்.எச்.எம்.பாயிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget