Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு அதிரடித் தீர்வு! (VIDEO)

சாய்ந்தமருதின் திண்மக்கழிவகற்றல் நடைமுறையில் காணப்படும் குறைபாடுகளும், அதனை நிவர்த்தி செய்வதன் அவசியம் தொடர்பிலும் சுட்டிக்காட்டி, கலசம்.கொம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்திய சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல், இச்சர்ச்சைக்கு தீர்வுகாண அதிகாரிகள் மட்ட சந்திப்பு ஒன்றை இன்று (14) சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கல்முனை மாநகரசபை விஷேட ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர். என்.ஆரிப், சாய்ந்தமருது கரையோரம் பேணலும், பாதுகாப்பும் அதிகாரசபை அதிகாரி ஏ.எம் ரிபாய் உட்பட சாய்ந்தமருது ஜுமா பள்ளிவாசல் நிர்வாக சபயினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதனடிப்படையில், வாரத்துக்கு 3 தினங்கள் அதாவது திங்கள், புதன்,வெள்ளி ஆகிய தினங்களில்  சாய்ந்தமருது பிரதேசம் முழுவதையும் உள்ளடங்கும் விதத்தில் 7 கழிவகற்றும் வாகனங்களை பயன்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநகரசபையின் கழிவகற்றல் வாகனங்களில் ஒலிச்சமிக்சைகள் செயட்படாமையால் இவ்வாகனங்களை மக்கள் இனம்காணுவதில் பிரச்சினை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அதனை சீர்செய்ய தேவையான உதவிகளை செய்து தர பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனடிப்படையில் பரீட்சார்த்த நடவடிக்கைகளை நாளை மறுதினம் (16) திங்கட்கிழமை முதல் அமுல் படுத்தப்போவதாக கல்முனை மாநகரசபை விஷேட ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

ஆனபடியால் குறித்த வேலைத்திட்டம் வெற்றியடைய பொது மக்களின் பாரிய ஒத்துழைப்பு தேவைப்படுவதாக கூட்டாக வேண்டுகோள் விடுக்கப்படுவதுடன், தயவுசெய்து பொது இடங்களில் களிவுப்பொருட்களை வீசுவதை கண்டிப்பாகத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வேலைத்திட்டம் தொடர்பாக ஊரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மூலமும் மக்களை அறிவுறுத்துவது என தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ காட்சி கீழே தரப்படுகின்றது.



https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget