Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான இலவச Online Form Filling Workshop!

-எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்முனை, சாய்ந்தமருது கல்வி ஆய்வு அபிவிருத்தி சபை ( Council for Education, research and development )  ஒழுங்கு செய்துள்ள 2016 / 2017 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவங்களை ஒன்லைன் மூலமாக நிரப்புதல், சரியான பொருத்தமான பாடநெறிகளை தெரிவு செய்தல் சம்பந்தமான ஆலோசனை வழங்குவதற்கான கருத்தரங்கு எதிர்வரும்  பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கு கல்முனை, சாய்ந்தமருது கல்வி ஆய்வு அபிவிருத்தி சபை கல்முனை வலய கல்விப் பணிமனையின் கணினி வளநிலையத்துடன்  அதாவது பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவினால் ஒன்லைன் மூலம் பதிவிற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அபிவிருத்தி சபையின் தலைவர் எம்.ஐ.எம்.சதாத் தெரிவித்தார்.

பெற்றோர்கள் இக்கருத்தரங்கில் தமது பிள்ளைகளை பங்குபெறச் செய்து கடந்த காலங்களில் பல்கலைக்கழக பாடநெறிகளைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட தடங்கல்களையும் தவறுகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்,

விபரங்களுக்கும், பதிவுகளுக்கும் 0774567314  எனும் இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget