Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அமெரிக்காவின் அதிபரானார் "ட்ரம்ப்" ; புதிய சாதனையுடன் பதவியேற்பு!

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று (20) பதவியேற்றார்.

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் அதிக வயதில் (70) அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர் என்ற சாதனையை ட்ரம்ப் படைத்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்புக்கு முன்னதாக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ், துணை அதிபராகப் பதவியேற்றார்.

அதிபர் பதவியேற்கும் முன்னர் துணை அதிபருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அமெரிக்க நடைமுறையாகும்.

முன்னதாக, அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். ஒபாமா, அவரது மனைவி மிஷெல் ஒபாமா சார்பில், டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒபாமாவும், ட்ரம்ப்பும் இணைந்து பாராளுமன்றம் சென்றனர்.
அதிபர் தேர்தலில் ட்ரம்பிடம் தோல்வியடைந்த ஹிலரி கிளிண்டன், அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சுமார் 8 இலட்சம் பேர் முன்னிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார்.
 
https://www.facebook.com/kalasemnet/
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget