Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய்யா கலாபீட மாணவர் கௌரவிப்பு விழா!


-யு.கே.காலித்தீன்  எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய்யா கலாபீடத்தின் மாபெரும் மாணவர் கௌரவிப்பு விழா நேற்று (26) வியாளக்கிழமை கலாசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலாபீடத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி யு.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா  பிரதம அதிதியாகவும் கலாபீடத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் அல்ஹாஜ் என்.எம்.ஏ.முஜீப் விசேட அதிதியாகவும் கலாபீட அதிபர் அல் ஹாபில் மௌலவி ஏ.எம்.எம்.பௌஸான் உள்ளிட்ட கலாபீட நிர்வாக சபை உறுப்பினர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இக்கலாசாலையில் 16 மாதங்களில் அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த மாணவன் ஏ.பி.எம்.அஸ்பாக் சிறப்பு விருது வழங்கியும் சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் அல்குர்ஆனை மனனம் செய்துவரும் மாணவர்களும் ஒழுக்கம்  வரவு பொதுப்பணியில் அக்கறை  2016 ஆம் ஆண்டின் இறுதிப் பரீட்சையில் முன்னிலை வகித்த மற்றும் பாட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பல மாணவர்கள் பாராட்டியும் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்த இப்பெரு விழாவினை கலாபீடத்தின் செயலாளர் ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர் எம்.ஆதம் நெறிப்படுத்தினார்.

மாணவர் கௌரவிப்பு விழா

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget