Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மாகாணசபை உறுப்பினர் ஜவாதினால் இறக்காம மக்களுக்கு வாழ்வாதார உதவி!

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதி பொருளாளருமான கே.எம். அப்துர்  றஸாக்(ஜவாத்) அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டது.

இறக்கமாம் பிரதேச சபை மண்டபத்தில் அதன் உதவிப் பிரதேச செயலாளர் நகீஜா தலைமையில் நேற்று (25) இடம்பெற்ற வைபவத்தில் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறிப்பிட்ட உதவிப்பொருட்களை வாங்கிவைத்தார்.

இந்நிகழ்வில், இறக்காமம் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்களான எம்.ஜ. நகீசர், யூ.கே. ஜாபீர் , மு.கா உயர்பீட உறுப்பினர் றியாஸ் மற்றும் சட்டத்தரனி பாறுக் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது 100க்கும் அதிகமானோர் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget