Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையை பெற்றுக்கொண்டார் அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை, அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அசோக் பிரீஸ் தலைமையில் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி, உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழு நியமிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி சாலிய மெத்திவ், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி ஏ.எஸ்.எம். மிஸ்பார், மக்கள் விடுதலை முன்னணி சார்பாக சட்டத்தரணி உபுல் குமரப்பெரும மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் பீ.பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

இதற்கு முன்னர் பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தாமதமாகியதுடன், அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிடாத காரணத்தினால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் அறிக்கையைப் பொறுப்பேற்பது நிராகரிக்கப்பட்டது.
எனினும், அனைத்து உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget