Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருதில் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் உதயம்!

டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்வின் ஓர் அங்கமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த சாய்ந்தமருது  ஹோட்டல் உரிமையாளர்களுக்கு திண்மக்க கழிவகற்றல் தொடர்பாக விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் இன்று (07) சாய்ந்தமருது, போலிவேரியன்   சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிடாக்டர் ஏ.எல்.எம். பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகார டாக்டர் என். ஆரிப், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருதில் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் சமகால பிரச்சினைகள் பற்றிய ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்யும் செயற்திட்டத்திம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்  முதற் கட்டமாக அவர்களுக்குள் ஒரு நிர்வாக கட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

தலைவர்: எம்.வை.எம். ஜௌபர், சீ பிரீஸ் ரெஸ்டூரண்ட்
செயளாலர் :  ஏ. மன்சூர், சாத் ஹோட்டல்
பொருளாளர் : கே.எல்.எம். பைசல், ஹமீடிய டீ ரூம்

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget