Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ஸாஹிராவின் சாதனை மாணவனுக்கு லெப்டொப் வழங்கினார் பிரதி அமைச்சர் ஹரீஸ்!

-யூ.கே.காலித்தீன், எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
கல்முனை மெஸ்றோ அமைப்பினால், கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  (19 ) கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இக்கல்லூரியின் பழைய மாணவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  கலந்துகொண்டார். 

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும், கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீனுக்கும்  பிரதியமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, அம்பாறை மாவட்டத்தில் உயர்தர கணிதப்பிரிவில் முதனிலை பெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் மாணவன் முஹம்மட் சஸ்னி பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் லெப்டோப் என்பன பிரதி அமைச்சரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்,  மெஸ்றோ அமைப்பின் தலைவரும், சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதியுமான சட்டத்தரணி ஏ.எம்.நஸீல், கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பழய மாணவ சங்க உறுப்பினர்கள் உட்பட  மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget