Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தால் கௌரவிக்கப்பட்ட முன்னாள் பிரதேச செயலாளர் சலீம்!

அண்மையில் பதவியுயர்வு பெற்றுச்சென்ற சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் தற்போதைய மேலதிகச்செயலாளருமான அல்-ஹாஜ் ஏ. எல். எம். சலீம் அவர்களின் சேவையைப்பாராட்டிக் கௌரவித்து சாய்ந்தமருது சமூக நலன்புரி மன்றத்தினால் (Social Welfare Forum) நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது, கடந்த 2016. 12. 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது ABM Restaurant இல் அதன் தலைவர் வைத்தியக்கலாநிதி அல்-அமீன் றிசாத்தின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், சாய்ந்தமருதின் தற்போதைய பதில் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா அவர்களும் கலந்து கொண்டதோடு, அவரை வரவேற்று, அந்த அமைப்பின் போசகராக இணையுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, அந்த அமைப்பின் வெற்றிப்பாதையில் அவரும் இணைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

ஏற்கெனவே அந்த அமைப்பின் போசகராக இருந்த மேலதிகச்செயலாளர் ஏ. எல். எம். சலீம் அவர்கள், அந்த அமைப்பின் தேசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அமைப்பின் தகவல் தொடர்பு இணைப்பாளராக அதன் முன்னாள் தலைவரும், கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவுப்பொறுப்பு வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி என். ஆரிப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பானது அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கணிசமானளவு அதிகரித்து, இனி வருங்காலங்களில் பிரதேச, சமூக, சமய, தேசம் சார்ந்த விடயங்களில் பலவிதமான நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget