Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

நவீன தொழில்நுட்ப முறையில் மீன்பிடியினை மேற்கொள்வதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் - அமைச்சர் மஹிந்த அமரவீர

-ஹாசீப் யாசீன், அகமட் எஸ். முகைடீன்-
நவீன தொழில்நுட்ப முறையில் மீன்பிடியினை மேற்கொள்வதற்கு இப்பிராந்;திய இளைஞர்கள் முன்வர வேண்டும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28) சனிக்கிழமை கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டடத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின்பேரில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொண்டு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை, கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.சி.எல். பெர்னாண்டோ, பணிப்பாளர் நிஹால் பாலித, உதவிப் பணிப்பாளர் சுமிந்த பிரபா விக்ரமஆராய்ச்சி, சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம்.ஹனீபா, கல்முனை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம். அப்துல் அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான சட்டத்தரணி எம்..அன்சில், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் .. பசீர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் . பாவா, கே.எம். தௌபீக், .எம். றினோஸ், ஊடகச் செயலாளர் றியாத் . மஜீத், அம்பாறை மாவட்ட மீனவ மற்றும் ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் எம். எம்.நசீர் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் அமரவீர, பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் மீனவர்களுக்கு தமது மீன்பிடி தொழிலினை மேற்கொள்ளும் பொருட்டு மீன்பிடி வலைகள் மற்றும் உயிர்காப்பு அங்கிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு தொடர்;ந்து அமைச்சர் மஹிந்த அமரவீர உரையாற்றுகையில்,

நவீன தொழில்நுட்ப முறையினை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலினை மேற்கொள்வதற்கு இப்பிராந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறனவர்களுக்கு சர்வதேச கடற் பிரதேசத்தில் மீன்பிடியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீண்ட நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியினை மேற்கொள்ளக்கூடிய நவீன வசதியுடன் கூடிய இயந்திரப் படகுகளை மானிய முறையில் வழங்குவதற்கு அமைச்சு தயாராகவுள்ளது. இதனை இப்பிராந்திய மீனவ சமூகம் பயன்படுத்தி தங்களது தொழில்கள் முன்னேற்றங்களை காண வேண்டும்.

தேசிய வருமானத்தில் மீன்பிடித்துறை மூலம் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை அதிகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் மீன்பிடி தொழிலினை விருத்தி செய்யுமுகமாக மீனவ குடும்பங்களுக்கு பல்வேறுபட்ட மானிய உதவிகளை செய்வதற்கு நாம் முயற்சிகள் எடுத்து வருகின்றோம். இதற்கமைவாக மானிய அடிப்படையில் இயந்திரப் படகுகள், மீன்பிடி உபகரணங்கள், மீனவர்களுக்கான வீடுகள், மலசலகூட வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படவுள்ளது.

அண்மையில் இப்பிரதேச மீனவர்கள் காணாமல் போனமை அவர்களிடம் எந்தவித தொடலைத்தொடர்வு சாதனங்களும் இல்லாமையே காரணமாகும். இப்பிரதேச மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்இதற்கமைவாக எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு சாதனங்களை இப்பிராந்திய மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒலுவில் துறைகத்தில் படகுகள் கடலுக்குச் செல்லும் பாதை மண்ணால் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மண்ணை அகற்றித்தருமாறு உங்களுடைய பிரதி அமைச்சர் ஹரீஸ் கோரியிருந்தார். அதற்கேற்ப ஒலுவில் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்றினை அனுப்பி மண் அகற்றும் பணிகள் இடம்பெறுகின்றது. இதற்காக எமது அமைச்சு 40 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. தற்போது ஒலுவில் துறைமுகம் துறைமுக அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளது. இத்துறைமுகத்தை துறைமுக அபிவிருத்தி அமைச்சு எமது கடற்றொழில் அமைச்சுக்கு கையளிக்கவுள்ளது. ஒலுவில் துறைமுகம் எனது அமைச்சின் கீழ் வந்தவுடன் அத்துறைமுகத்தில் காணப்படும் ஏனைய குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

 
https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget